ஆப்பிளின் குறைந்த விலை ஐபோன்கள்!

புதன், 9 ஜனவரி 2013 (17:25 IST)
FILE
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை ஐபோன்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முடிந்த வரை இந்த ஆண்டின் பாதிக்குள் வெறும் 500 டாலர் மதிப்பு கொண்ட குறைந்த விலை ஐபோன்களை வெளியிட ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகின்றது.

புதிதாகத் தயாரிக்கப்படும் இந்த ஐபோன்கள், தற்போது பயன்பாட்டில் உள்ள ஐபோன்களைப் போலவே தோற்றத்தில் காணப்படும். ஆனால் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் போன்ற குறைந்த விலை உபகரணங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோனை வெளியிட்ட 2007-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. முதல்முறையாக தற்போது தனது ஐபோனை மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த மாடல் போன்கள், தற்போது பயன்பாட்டில் உள்ள மாடலை விட சிறியதாக இருக்கும்.

ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன் மாடல்களான 4 மற்றும் 4S-ஐ தனது வெப்செட்டின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்