ஆகாஷ் டேப்லெட்டின் விலை ரூ.1900 மட்டுமே! -கபில் சிபில்

புதன், 12 டிசம்பர் 2012 (17:38 IST)
FILE
தற்போது 45 டாலராக இருக்கும் ஆகாஷ் டேப்லெட்டின் விலை கூடிய விரைவில் 35 டாலராக குறையும் என்று மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு சாதன ஏற்றுமதி மையத்தின் வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் சந்திப்புக்குப் பிறகு பேசிய கபில் சிபில், எல்லா நவீன வசதிகளுடன் கூடிய டேப்லெட் வெறும் 35 டாலருக்கு (தோராயமாக ரூ.1900) கிடைக்கும்.

இதன் அடுத்த வகை டேப்லெட்டில் இணையதளத்தைப் பயன்படுத்தி வாய்ஸ்கால் செய்யப் பயன்படும் ஸ்கைப் இருக்கும். ஆனால் இதற்கு சிம் தேவையில்லை.

இந்த ஆகாஷ் டேப்லெட் 150 டாலர் டேப்லெட்டில் உள்ள அனைத்துப் பயன்பாடுகளையும் கொண்டிருக்கும். உலகில் மூன்றில் இரண்டு பாகத்தினருக்கு தேவைப்பட்டுமஇந்டேப்லெட் 150 டாலர் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்காக உருவாக்கப்படும் குறைந்த விலை உபகரணம் ஆகும்.

ஆகாஷ் டேப்லெட்டுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் முதற்கட்டமாக 50 லட்சம் யூனிட்டுகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுக்க பரப்பப்படும். இதன் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் போது விலமேலுமகுறையும் என்று கபில் சிபில் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்