வாட்டர் ப்ருஃப் சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ் விரைவில்!

சனி, 8 ஜூன் 2013 (14:09 IST)
FILE
தென் கொரியாவின் மின்னணுவியல் நிறுவனமான சாம்சங், தனது கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ் போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ், தனது நிறுவனத்தின் கரடுமுரடான போன் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த போனை தண்ணீரின் ஆழத்தில் கூட பயன்படுத்த முடியும். நீரில் மூழ்கிய பின் 30 நிமிடம் இந்த போனைப் பயன்படுத்த முடியும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

இந்த போனில் 1.9 GHz க்வாட்-கோர் ப்ராசஸர் உள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2.2.ஜெல்லி பீன் இயங்குதளத்தில் இயங்கும். 5இன்ச் LCD TFT திரையைக் கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீன் பகுதிறன்(Resolution) 1080 பிக்ஸல். மேலும் இதில் 16GB இன்டெர்னல் மெமரி (விரிவுபடுத்தக் கூடிய Micro SD slot).
FILE

"அக்வா மூட்" வசதி மூலம் நீருக்குள் மிகத் தெளிவான புகைப்படங்கள் எடுக்க முடியும். இந்த போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ் போன் நீலம், சாம்பல் மற்றும் ஆரஞ்ச் போன்ற இளமையான வண்ணங்களில் கிடைக்கும். இந்த போனின் விலை குறித்த விவரங்களை சாம்சங் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்