மொபைலில் மருத்துவ குறிப்புகள்-யுனிவர்செல் தொடங்கியது

புதன், 29 ஜூலை 2009 (15:42 IST)
செல்போன் சில்லரை விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் யுனிவர்செல் நிறுவனம், மொபைல் போன் உபயோகிப்பாளர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மருத்துவக் குறிப்புகளை குறுந்தகவல் சேவையாக (எஸ்.எம்.எஸ்) வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மதிப்பு கூடுதல் சேவை `மொபைல் மெடி அலர்ட்' என்ற பெயரில் அனுப்பப்படும்.
webdunia photo
WD
ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் பொதுவான, அத்தியாவசியமான ஒன்று என்றாலும், வேலைப்பளு காரணமாக உடல் ஆரோக்கியம் மற்றும் அதற்குத் தேவையான உடற்பயிற்சியை பல நேரங்களில் பலரும் செய்ய முடிவதில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு யுனிவர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பர்பிள்டீல் வழங்கும் மொபைல் அடிப்படையிலான புதிய தனிப்பட்ட ஆரோக்கியக் குறிப்புகள் வழங்கும் சேவையை தொடங்கியிருப்பதாக யுனிவர்செல் நிறுவன துணைத் தலைவர் ரமேஷ் பரத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் வயது மற்றும் அவர்கள் ஆணா அல்லது பெண்ணா என்பதைப் பொருத்து, அவர்களுக்கான நோய் தாக்குதல் அபாயம் என்னென்ன என்பது குறித்து மொபைல் மூலம் செய்தி அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

அதற்கேற்ப அவர்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை எடுத்துக் கொள்ள முடியும்.

இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்ற சுய பரிசோதனை செய்து அறிந்து கொள்ளும் நோயாக இருந்தால், இந்த மருத்துவக் குறிப்புகள் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார் ரமேஷ்.

தவிர வயதான தங்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளுக்கும் இந்த புதிய சேவை உதவும்.

மொத்தத்தில் உடல் ஆரோக்கியம் குறித்து எஸ்.எம்.எஸ். மூலமாக நினைவூட்டல் செய்து, அதனை வழக்கமாக்கிக் கொள்வதே இந்த சேவையின் முக்கிய நோக்கமாகும் என்று பர்பிள்டீல் தலைமை நிர்வாக அதிகாரி நாராயண ராம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்