மை‌க்ரோசாஃ‌ப்‌ட் ஆ‌ஃபி‌ஸ் 2007 எ‌ல்ஐ‌பி

புதன், 21 அக்டோபர் 2009 (15:27 IST)
தற்காலத்தில் கணினிகளில் பணிபுரிவது ஒரு ஃபேஷனாகவும், கட்டாயமாகவும் மாறி விட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 15-20 ஆண்டு காலமாக இந்நிலை இருந்து வருகிறது. ஆனாலும் ஆங்கில மொழியறிவு என்பது இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் கணினிகளைப் பழகுவதையும் பயன்படுத்துவதையும் தடுத்து வந்தது. இந்த ஆங்கில மொழி தடையினால், கணினியைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நற்பலன்களைப் பெறுவதிலிருந்து இந்தியாவின் பெரும்பாலான கிராமப்புற மக்களும், பல நகர்ப்புற மக்களும் மிக சமீப காலம் வரை தடுக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் இனி இந்த நிலை இருக்காது! உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான, Microsoft, கணினியை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Microsoft இப்போது இந்தியாவின் எல்லா முக்கிய மொழிகளிலும் மொழி இடைமுகத் தொகுப்பை வழங்குகிறது. இதனால் ஒவ்வொரு சராசரி மனிதனும் கணினியைப் பயன்படுத்த முடியும். மொழி இடைமுகத் தொகுப்புகள் அல்லது சுருக்கமாக LIPகள் என்பவற்றை நிறுவுவதும் பயன்படுத்துவதும் மிக எளிதானது. இந்த மென்பொருள், கணினிகளைப் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிவிடும்.

webdunia photo
WD
இந்த தொகுப்பை இங்கிருந்து பதிவிறக்கி, .exe கோப்பைக் கிளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவினால் போதும். இதை நிறுவ உங்கள் கணினியில் Microsoft Office 2007 -இன் ஆங்கில பதிப்பு இருக்க வேண்டும். ஒரு சில விநாடிகளிலேயே உங்கள் கணினி உங்களுடன் உங்கள் மொழியிலேயே பேச தொடங்கி விடும். ஆவணமாக்கம், மின்னஞ்சல், ஒரு விளக்கக்காட்சியை உருவாக்குவது அல்லது சற்று முன்னர் உங்களுக்கு சிக்கலாக தெரிந்த எதை வேண்டுமானாலும் இப்போது நீங்கள் புரிந்து கொண்டு நம்பிக்கையுடன் செய்யலாம். ஏனெனில் அது உங்கள் மொழியிலேயே இருக்கிறது, அதை உங்களால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.

எனவே, முயற்சித்து பாருங்களேன்... இது உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்!

வெப்துனியாவைப் படிக்கவும்