செல்ஃபோன் உதவியுடன் சமைக்கும் ஸ்மார்ட் குக்கர்

புதன், 8 ஜனவரி 2014 (17:35 IST)
ஆன்ட்ராய்டு செல்போனின் உதவியுடன் சமையல் செய்யக்கூடிய ஸ்மார்ட் குக்கரை பெல்கின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
FILE


புத்திசாலி குக்கர் இருக்கும்போது பழைய குக்கர்கள் எதற்கு? உலகின் பிரம்மாண்டமான நுகர்வோர் எலெக்ட்ரானிக் கண்காட்சி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நகரில் இன்று தொடங்கியது. அதில் பெல்கின் எனப்படும் அமெரிக்க நுகர்வோர் எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செல்போனின் உதவியுடன் சமைக்கும் குக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் வெமோ ஸ்லோ குக்கர். இந்த குக்கர் செல்ஃபோனின் இணைய உதவியுடன் கட்டுப்படுத்தப்படும் வெமோ(WeMo) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இக்குக்கர் வீடுகளை ஸ்மார்ட் ஹோமாக மாற்றும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
FILE


ஸ்மார்ட் ஃபோனின் உதவியுடன் இயங்கும் இந்த குக்கர் சமைக்கும் நேரத்தை மாற்றி அமைப்பது, சமைப்பவர்களுக்கு ஞாபகப்படுத்துவது(reminder) போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, மேலும் ஸ்மார்ட் ஃபோனில் உள்ள ஆப்ஸின்(apps) மூலம் நாம் சமைக்கும் உணவு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த அற்புத படைப்பின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அது விரைவில் அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.