க‌ணி‌னி மோசடி பற்றி திடுக்கிடும் தகவல்கள்

திங்கள், 30 மார்ச் 2009 (12:29 IST)
இந்திய தூதரகம் உள்பட 103 நாடுகளில் உள்ள க‌ணி‌னிக‌ளில் ஊடுருவி தகவல்களை திருடியதாகவும், உளவு பார்த்ததாகவும் சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமா உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவரது அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள், உலகின் பல நாடுகளில் உள்ளன. இந்நிலையில், இந்த அலுவலக க‌ணி‌னிக‌ளி‌ல் தகவல்கள் திருடப்படுவதாகவும், உளவு பார்க்கப்படுவதாகவும் தலாய்லாமா அமைப்பினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, இதுபற்றி விசாரணை நடத்துமாறு கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டது. இவர்கள், இத்தகைய சைபர் குற்றங்களை துப்பு துலக்குவதில் முன் அனுபவம் பெற்றவர்கள் ஆவார். அதன் அடிப்படையில், அந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சீனாவில் இருந்து செயல்படும் ஒரு க‌ணி‌னி உளவு கும்பல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலக நாடுகளின் க‌ணி‌னிகளில் ஊடுருவி தகவல்களை திருடி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

103 நாடுகளில் உ‌ள்ள 1,295 க‌‌ணி‌னிக‌ளி‌ல் இந்த கும்பல் ஊடுருவி உள்ளது. இதற்காக, பிரத்யேகமான மென்பொருளை இக்கும்பல் பயன்படுத்தி வருகிறது. க‌ணி‌னிக‌ளி‌ல் திருட்டுத்தனமாக புகுந்து ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதுடன், அந்த க‌ணி‌னிகைள தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

தலாய்லாமாவை மட்டுமின்றி, தெற்கு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசாங்கங்களை குறிவைத்து இக்கும்பல் இயங்கி உள்ளது. தற்போதும், வாரத்துக்கு ஒரு டஜன் புதிய க‌ணிக‌ளி‌ல் இக்கும்பல் ஊடுருவி வருவதாக இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இந்த கும்பல், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் க‌ணி‌னி‌யிலு‌ம் ஊடுருவி உள்ளது. பன்னாட்டு (நேட்டோ) படைகளின் க‌ணி‌னிக‌ளிலு‌ம் ஊடுருவி உள்ளது. ஆனால், அமெரிக்க அரசு அலுவலக க‌ணி‌னிக‌ளி‌ல் புகுந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பல்வேறு நாட்டு தூதரகங்கள், வெளியுறவு அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள், இந்தியா, பிரசல்ஸ், லண்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் உள்ள தலாய்லாமா அலுவலக க‌ணி‌னிக‌ள் ஆகியவற்றில் சீன க‌ணி‌னிக‌ளி‌‌ல் உளவு கும்பல் ஊடுருவி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கும்பலின் தகவல் திருட்டுக்கு சில ஆதாரங்களும் சிக்கி உள்ளன. உதாரணமாக, ஒரு வெளிநாட்டு தூதரக அதிகாரியை நேரில் வருமாறு தலாய்லாமா அலுவலகம், இ-மெயில் மூலம் அழைப்பு விடுத்தது. அதை மோப்பம் பிடித்த சீன அரசு, அந்த அதிகாரியை தொடர்பு கொண்டு, அங்கு செல்ல வேண்டாம் என்று கூறி, தடுத்து விட்டது.

இருப்பினும், இந்த சைபர் குற்றத்தில் சீன அரசுக்கு தொடர்பு இல்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நிïயார்க் நகரில் உள்ள சீன தூதரக செய்தித்தொடர்பாளரும், இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்