கைக்கடக்கமான விலையில் கணினிகள்!

ஒவ்வொரு இந்திய இல்லத்திலும் ஒரு கணினி என்ற கனவு விரைவிலேயே நனவாகிவிடும் என்ற நம்பிக்கையை என்கோர் மென்பொருள் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மொபிலிஸ், லினக்ஸஅடிப்படையிலான குறைந்த விலை கணினியாக மே-10 செவ்வாயன்று டெல்லியில் அறிமுகப்படுத்தப் பட்டது.

இண்டெல் நிறுவன எக்ஸஸ்கேல் பி எக்ஸஏ 255 200/ 400 மெஹா ஹெர்ட்ஸப்ராசஸர், 128 எம்.பி எஸ்.டி.ரேம்
கொண்ட மொபிலிஸ் 7.4 அங்குல எல்.சி.டி திரை, சுருள் விசைப்பலகை, தொடு திரை, ஸ்டைலஸ் ( எழுத்தாணி போன்ற குச்சி), 6 மணி நேர பேட்டரி மின்சக்தி, டெஸ்க்டாப் ஸ்டாண்ட் / கணினி உறை என்று இரண்டுவிதமாகப் பயன்படும் வசதிகளுடன் கிடைக்கிறது.

லேப்டாப் போன்று கையில் எடுத்துச் செல்லத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபிலிஸகணியின் எடை 750 கிராம் மட்டுமே ( 1.6 பவுண்டுகள்). மொபிலிஸவயர்லெஸமற்றும் மொபிலிஸஸாஃப்காம்ப் என மேலும் இரண்டு மேம்பட்ட மாடல்களையும் இந்த பெங்களூர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மூன்று தயாரிப்புகளுமே இந்திய மொழிகளில் இயங்கும் வல்லமை படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

மொபிலிஸஅடிப்படை மாடல் ரூ.10,000/= ; வயர்லெஸ/ஒருங்கிணைந்த விசைப்பலகை மாடல் ரூ.15,000/=; ஸாஃப்காம்ப் / பாரம்பரிய கேதோட் ரே டியூப் மானிட்டர் அடங்கிய மாடல் ரூ.10,000/= என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெருமளவிலான உற்பத்தி தொடங்கும் போது விலைகள் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக என்கோர் நிறுவன தலைமை செயலதிகாரி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், சிறிய அளவிலான வணிக நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள்...என்று சமூகத்தின் பல பிரிவினருக்கும் மிகப் பயனுள்ள சாதனமாக தங்களின் மொபிலிஸஅமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்