கூகுள் வழங்கும் பர்ஸனலைஸ்ட் இணையப் பக்கம்

யாஹூ, மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களைப் போன்றே கூகுள் நிறுவனமும் வலைவாசிகள் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணையப் பக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. எனினும் கூகுள் தேடுதல் இயந்திரமே பிரதான இடத்தில் இருக்கும். செய்திகள், தினம் ஒரு தகவல்,ஜி மெயில்...என்று உங்களுக்குத் தேவையான அம்சங்களை பிடித்தமான வகையில் அமைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை இடமாற்றம் செய்ய, மவுஸை அழுத்தி விரும்பிய திசையில் இழுத்தால் போதும். திருத்தியமைக்கவும் சம்பந்தப்பட்ட அம்சங்களின் அருகிலேயே எடிட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியால் கூகுள் இணையதளத்தை ஒரு போர்ட்டல் வெப்சைட்டாக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது சோதனை அடிப்படையிலேயே இந்த முயற்சி வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜி மெயில் வசதியைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த வசதியைப் பரிசோதிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் தேடுதல் இயந்திரத்தை நாடும் வலைவாசிகள், முகப்புப் பக்கத்தில் சற்று கூடுதல் நேரத்தை செலவழிக்க இந்த வசதி உதவும் என கூகுள் நம்புகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்