கூகுள் லாபம் முதன் முறையாக குறைந்தது

வெள்ளி, 23 ஜனவரி 2009 (12:20 IST)
உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள் முதன் முதலாக தனது காலாண்டு லாபத்தில் பின்னடைவு கண்டுள்ளது.

இருப்பினும் சந்தை எதிர்பார்ப்புகளுக்கு அதிகமான லாபங்களை ஈட்டியுள்ளது. டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் மட்டும் கூகுள் 382 மில்லியன் டாலர்கள் அல்லது பங்கு ஒன்றுக்கு 1.21 டாலர்கள் என்று நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இது 2007ஆம் ஆண்டு இதே காலாண்டு லாபத்தைக் காட்டிலும் 68 விழுக்காடு குறைவாகும். ஆனால் நிறுவனத்தின் வருவாய் 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.

"இருந்து வரும் பொருளாதார நிலைமைகளில் எங்கள் நிறுவனம் ஆரோக்கியமாகவே உள்ளது" என்று கூகுள் நிறுவனத் தலைமை செயலதிகாரி எரிக் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

வருவாய் ஆதிகரிப்பு அறிவிப்பு வெளிவந்ததையடுத்து கூகுள் பங்குகளின் விலை 2 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து பங்கு ஒன்றின் விலை 312.75 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்