கடலடி கேபிள் துண்டிப்பு: பிபிஓ, ஐ.டி நிறுவனஙக்ள் பாதிப்பு

செவ்வாய், 23 டிசம்பர் 2008 (16:05 IST)
மேற்கு ஆசியாவில் இருந்து ஐரோபபாவை இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்கள் (கண்ணாடி இழை) துண்டிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவில் பிபிஓ மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிகள் பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த பாதிப்பு இருக்கும் என்றும், அதன் பின்னர் இண்டர்நெட் இணைப்பு சீராகும் என்றும் இணைய தள சேவை வழங்கும் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் சாரியா தெரிவித்துள்ளார்.

இணையதள இணைப்புகளின் வேகம் குறைந்ததாலும், டேட்டா நெட்வொர்க் நெருக்கடி அதிகரித்ததன் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே டாடா கம்யூனிகேஷன் நிறுவன அதிகாரிகக்ள் கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை கடலடி கேபிள் இணைப்புகள் சரியாகும் என்றும், கேபிள்களை பழுது நீக்கும் பணிகள் தொடங்கி விட்ட்தாகவும் தெரிவித்தனர்.

கேபிள் பாதிப்பால் இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் இணைய தள இணைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்