ஐ.பி.எம் நிறுவன ஊழியர்களுக்கு மே 1 முதல் இலவச டீ, காபி நிறுத்தம்

புதன், 15 ஏப்ரல் 2009 (18:35 IST)
பொருளாதார பின்னடைவை ஈடுசெய்ய முன்னணி மென்பொருள் மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனமான ஐ.பி.எம். தனது நிறுவனத்தின் செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, தற்போது ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் காபி, டீ உள்ளிட்ட ஊக்க பானங்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது மே 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதேபோல் நிறுவனத்தின் செலவில் ஊழியர்களின் வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இணையதள சேவையும் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், தற்போது உள்ள இலவச டி, காபி அளிக்கும் இயந்திரங்களை நீக்கி விட்டு, பணம் தந்தால் டீ, காபி வினியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை நிறுவ ஐ.பி.எம். திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்