ஊழியர்களை நிறுத்தும் யாஹூ

வெள்ளி, 6 ஏப்ரல் 2012 (16:02 IST)
போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் நட்டத்தை கண்ட யாஹூ நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாஹூ நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாகியாக ஸ்காட் தாம்சன் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் யாஹு நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டதாக ஸ்காட் தாம்சன் தெரிவித்தார்.

எனவே பணியாட்களை குறைப்பதன் மூலம் சிக்கன நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2011-ல் யாஹூவில் 14 ஆயிரம் பணியாளர்கள் இருந்தனர்.

இப்போது இவர்களில் 2 ஆயிரம் பேரை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு 375 மில்லியன் டாலர்களை சேமிக்கவும் வரிகள் மூலம் 45 மில்லியன் டாலர்கள் வரை சேமிக்கவும் யாஹூ முடிவு செய்துள்ளது.

இதனிடையே யாஹூ நிறுவனம் தனது வளர்ச்சி குறித்து அடுத்த வாரம் ஊழியர்களிடம் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்