இணைய தளத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

செவ்வாய், 5 மே 2009 (11:46 IST)
த‌‌மிழக‌த்‌தி‌ல் ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் ப‌திவான வா‌க்குகளை எ‌ண்ணு‌ம் ப‌ணி நட‌க்கு‌ம்போது, உடனு‌க்குட‌ன் ‌விவர‌ங்களை அ‌‌றிய பு‌திய மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் தேதி நடக்கிறது. இதில், முதன்முறையாக வாக்கு எண்ணிக்கை மற்றும் வேட்பாளர்கள் முன்னணி நிலவரத்தை வாக்காளர்கள் மற்றும் உலகளவில் வாழும் இந்தியர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக இணையதளத்தில் வெளியிட ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, வாக்கு எண்ணிக்கை நிலவரம் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன் அந்த விவரம் இணையதளத்தில் சேர்க்கப்படும். இதற்கான புதிய மென்பொருளை தேர்தல் ஆணையம் வடிவமைத்து அனுப்பியுள்ளது.

இதற்காக மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளின் உதவி தேர்தல் அலுவலர்களுக்கு தனித்தனி க‌ணி‌னிகள் தரப்பட்டுள்ளன. மாதிரி வாக்கு எண்ணிக்கை அளித்து இணையதளத்தில் முடிவுகள் வெளியிடுவது நேற்று நடந்தது. மீண்டும் வரும் 11ம் தேதியும் இது மேற்கொள்ளப்படும். இணையதள முகவரி: www.eci.nic.in

வெப்துனியாவைப் படிக்கவும்