அரேபியாவிலுள்ள மக்காவில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) மக்காவில் நிலவிய மூடநம்பிக்கைகளை, இறைவனைப் பற்றிய தவறான கருத்துக்களை, அநீதிகள் ஆகியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தார்.
“ஓதுவீராக! படைத்த இறைவனின் திருப்பெயரைக் கொண்டு! இரத்தக்கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். ஓதுவீராக! மேலும் உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன்றியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான் என்ற வசனங்களே தொடக்கத்தில் நபிகளாருக்கு அருளப்பட்ட வசனங்களாகும்.