திருமறையா‌‌ம் ‌திரு‌க்கு‌ர்ஆ‌ன் கூறு‌ம் செ‌ய்‌தி

புதன், 10 ஜூன் 2009 (11:24 IST)
திருமறையா‌ம் ‌திரு‌க்கு‌ர்ஆ‌ன் ‌பி‌ள்ளைகளு‌‌க்கு ஒரு செ‌ய்‌தியை‌க் கூ‌று‌கிறது. அதாவது பெ‌ற்றோ‌ர்களை ஒது‌க்‌கி‌விடாம‌ல், ‌கடி‌ந்து கொ‌ள்ளாம‌ல் ந‌ன்கு பராம‌ரி‌க்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்பதை வ‌லியுறு‌த்து‌கிறது.

webdunia photoWD
(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘ச‘ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

இதனை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அனைவருமே நமது பெ‌ற்றோ‌ர்களை, தமது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌நிகராக ப‌ரிவு‌ம், அ‌ன்பு‌ம் செலு‌த்‌தி பராம‌ரி‌க்க வே‌ண்டியது அவ‌சியமா‌கிறது எ‌ன்பதை அ‌றி‌வீ‌ர்.