கேப்டன் தோனியின் சாதனையை முந்திய ரோஹித் சர்மா !

சனி, 17 ஏப்ரல் 2021 (23:41 IST)
ஐபிஎல் -2021 ; 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் இன்று ஐதராபாத் அன்னியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  டி-20 போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்த  கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இவர் 5324 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமடித்துள்ளார். சர்வதேச டி-20 போட்டிகளில் 2664 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும் 22 அரைசதமும் அடங்கும்.

ஐபிஎல் தொடரில்  ரோஹித் சர்மா, அதிக சிகஸர்கள் அடித்த வீரர்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை ரோஹித் 217 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தோனி 216 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதற்கடுத்த இடத்தில் கோலி (201)உள்ளார். 4 வதாக சுரேஷ் ரெய்னா(198) இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்