டார்கெட் 161: பஞ்சாப் அணி vs சிஸ்கே!

சனி, 6 ஏப்ரல் 2019 (17:55 IST)
12 ஆவது ஐபில் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று நடக்கும் 18 ஆவது போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. 
 
இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளன. இந்த சீசன் முழுவதும் இரு அணிகளும் சமபலம் கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடியது. 20 ஓவர் முடிவில் 160 ரன்களை குவித்துள்ளது. 
 
வாட்சன் 26 ரன்கள், டு பிளஸ்சி 54 ரன்கள், தோனி 37 ரன்கள், ராயுடு 21 ரன்கள், ரெய்னா 17 ரன்கள் எடுத்தனர். அடுத்து பஞசாப் அணி 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாட உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்