8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதால், கோப்பையை வெல்ல ஒவ்வொரு அணியும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இத்தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் கெய்ல், கோலி சற்று ஏமாற்றினாலும் பின் வந்த டிவில்லியர்ஸ் மற்றும் மந்தீப் சிங் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை சேகரித்தது.
இடைத்தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி, தொடக்கத்திலேயே வாட்சன் விக்கெட்டை பறிகொடுத்தது. பின் இணைந்த சாம்சன், சுமித் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி ரன் சேகரிக்க முடியாமல் பறிதவித்தது. எனினும் ஒருமுனையில் ரகானே மட்டும் போராடிகொண்டிருந்தார்.