தோனி தலைமைக்கு போலிஞ்சர் பாராட்டு

வெள்ளி, 23 ஏப்ரல் 2010 (13:45 IST)
டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு சென்றதையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆஸ்ட்ரேலிய வீரர் டக்கி போலிஞ்சர் அணித் தலைவர் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

"மஹி (தோணி) ஒரு மிகச்சிறந்த கேப்டன், சிறந்த வீரர், அவர் தலைமைப் பொறுப்பை திறம்படச் செய்து வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் தான் யார் என்று காண்பித்தார்." என்று கூறினார் போலிஞ்சர்.

இறுதிப் போட்டியில் மும்பை இந்திஅன் அணிக்கு எதிராக தங்கள் அணி போராடத் தாயாராக இருக்கிறது என்று கூறிய போலிஞ்சர் மும்பை இந்தியன் அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர் என்றார்.

இருப்பினும் எங்களது திறமைக்கேற்ப விளையாடி, முழு பங்களிப்பையும் அளித்து சாம்பியன் பட்டம் வெல்ல முயல்வோம் என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்