ஐபிஎல்- 2020; சென்னை கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்கு....

செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (21:33 IST)
இன்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை  அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து சாம் குர்ரன் பந்துவீச்சில் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சஞ்சு சேம்சன் 6 பந்துகளுக்கு 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இதில், சென்னை அணி தரப்பில், சாகர் 2 விக்கெடுகளும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், சாவ்லா இரண்டு விக்கெட்டுகளும், கரண் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்..

20 ஓவர்கள் முடிவியில்  ராஜஸ்தான் அணி  216 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்கு 217  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனால் ஆட்டம் சூடு பிடுக்கும் என எதிர்ப்பார்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்