அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷா 10 ரன்களிலும் ஷிகார் தவான் டக் அவுட்டும் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இந்த இரண்டு விக்கெட்களையுமே ட்ரண்ட் போல்ட் கைப்பற்றினார். மும்பை அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு ஜெயந்த் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.