தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.
முந்தைய 3 போட்டிகளில் சென்னையிடம் பெற்ற தோல்விக்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற ஐதராபாத் அணி தீவிரமாக உள்ளது. அதேபோல், சென்னை அணி முந்தைய போட்டிகளில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதை போல இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.