இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் கடந்த மாதம் தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடியது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்றைய இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை 8 வீக்கெட் வித்தியாசத்தில் வென்று 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் 11வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு கோப்பை மற்றும் ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட்டது.
மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
1.) சிறந்த கேட்ச் பிடித்த வீரர்- டிரெண்ட் போல்ட் ( டெல்லி)
2.) வளர்ந்து வரும் இளம் வீரர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது- ரிஷப் பந்த் ( டெல்லி)
3.)அதிக ரன்கள் எடுத்த வீரர்- கேன் வில்லியம்சன் ( ஐதராபாத்)
4.) அதிக வீக்கெடுக்களை வீழ்த்திய வீரர்- ஆண்ட்ரு டை (பஞ்சாப்)
5.) சூப்பர் ஸ்டரைகர் மற்றும் மதிப்புமிக்க வீரருக்கான விருது - சுனில் நரைன் (கொல்கத்தா)
6.) நியாயமாக விளையாடிய அணி: மும்பை இந்தியன்ஸ்
7.) சிறப்பாக யோசிக்கும் வீரருக்கான விருது- தோனி (சென்னை)