சத்தமில்லாமல் கோலியை காலி செய்த ரெய்னா!!

சனி, 8 ஏப்ரல் 2017 (12:54 IST)
ஐபிஎல்-ல் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 


 
 
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி 4,110 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
 
சுரேஷ் ரெய்னா 4,098 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். இந்நிலையில், ஐபிஎல் 10 வது சீசன் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த சாதனை நிகழ்த்தினார். 
 
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதுவரை 148 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரெய்னா 4166 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்