10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், ஜோஸ் பட்லர், அம்பத்தி ராயுடு, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, ஹர்பஜன்சிங், மிட்செல் ஜான்சன், பும்ரா, மிட்செல் மெக்லெனஹான்
புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது உஸ்மான் கவாஜா, பென் ஸ்டோக்ஸ், டோனி, ரஜத் பாட்டியா அல்லது மனோஜ் திவாரி, அசோக் திண்டா, அங்கித் ஷர்மா, ஷர்துல் தாகுர், இம்ரான் தாஹிர் அல்லது ஆடம் ஜம்பா.