ஐபிஎல்: ஆரஞ்ச் மற்றும் ஊதா நிற தொப்பியின் வரலாறு!!

புதன், 5 ஏப்ரல் 2017 (19:10 IST)
ஐபிஎல் கிரிக்கெல் போட்டியில் ஆரஞ்ச் மற்றும் ஊதா நிற தொப்பிகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.


 
 
ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்படும்.
 
ஆரஞ்சு நிற தொப்பியை ஷான் மார்ஷ், மேத்யூ ஹைடன், சச்சின் தெண்டுல்கர், கிறிஸ் கெய்ல் (2 முறை), மைக் ஹஸ்சி, ராபின் உத்தப்பா, டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோரும் பெற்றுள்ளனர்.
 
ஊதா நிற தொப்பியை சோகைல் தன்விர், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, மலிங்கா, மோர்னே மோர்கல், வெய்ன் பிராவோ (2 முறை) மொகித் ஷர்மா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் பெற்றுள்ளனர்.
 
ஐபிஎல் நிறைவில் ரன் குவிப்பிலும், விக்கெட் வேட்டையிலும் முதலிடத்தில் இருக்கும் வீரர்களிடம் அது கடைசியாக சென்றடையும். 
 
இந்த தொப்பியை வசப்படுத்தும் வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்