இந்தூர் ஐபிஎல் துவக்க விழாவில் தோனியின் ரீல் காதலி!!

புதன், 5 ஏப்ரல் 2017 (17:56 IST)
இந்தூரில் நடக்கவுள்ள 10 வது ஐபிஎல் தொடரின் துவக்க விழாவில் தோனிப்பட நாயகி திஷா நடமாட உள்ளார்.


 
 
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவில், இந்த ஆண்டு ஒவ்வொரு அணி நிர்வாகமும் தனித்தனியாக துவக்க விழா நடத்த திட்டமிட்டுள்ளது.
 
அதில், இந்தூரில் நடக்கும் துவக்க விழாவில், முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியின் காதலியாக நடித்த திஷா பதானி நடனமாடவுள்ளார்.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிகள் மோதும் போட்டி வரும் ஏப்ரல் 8-ல் இந்தூரில் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக இந்த துவக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்