நாங்கள் தொழில் முறை வீரர்கள்: ஜாகீர் கான்!!

வெள்ளி, 12 மே 2017 (11:59 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியை தோற்கடித்தது.


 
 
ஐபிஎல்-ல் 5 வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஆறுதல் கண்டுள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
 
இது குறித்து ஜாகீர்கான் அளித்த பேட்டி, கடைசியில் நேரத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் வேகம் சற்று குறைய தான் செய்யும். 
 
ஆனால் நாங்கள் தொழில்முறை வீரர்கள். வாய்ப்பை இழந்ததை புறந்தள்ளி விட்டு வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும். 
 
மேலும், எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உயர்வான நிலையுடன் போட்டியை நிறைவு செய்ய விரும்புகிறோம் என்று தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்