ஸ்டாலின், ரஜினி உள்பட பிரபலங்கள் டுவிட்டர் புளூடிக் நீக்கம்.. என்ன காரணம்?

வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (07:46 IST)
முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் இருந்த புளூடிக் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு புளூடிக் தொடர வேண்டுமென்றால் சந்தா கட்ட வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். அதற்கான காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. 
 
இதனை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு, கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, தோனி உள்ளிட்டோர் ட்விட்டர் கணக்குகளில் இருந்த புளூடிக் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
அதுமட்டுமின்றி பல பிரபலங்களின் சந்தா கட்டாத ட்விட்டர் கணக்குகள் புளூடிக் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் பிரபலங்கள் தங்களுடைய புளூடிக்கை நீடிக்க வேண்டுமென்றால் உடனடியாக சந்தா கட்ட வேண்டும் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்