முருங்கைக்கீரை லெமன் சூப்

சனி, 23 பிப்ரவரி 2013 (15:47 IST)
இக்கால இளைய தலைமுறையினருக்கு கூந்தல் உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாகவே மாறியிருக்கிறது. இந்த சிக்கலிருந்து விடுபட ஒரு சுவையான தீர்வு இருக்கிறது. தினமும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் முருங்கைக்கீரை லெமன் சூப்பை குடித்துவந்தால் கூந்தல் வளர்ச்சி இல்லாதவர்களுக்கு கூட கூந்தல் அழகாகவும், அடர்த்தியாகவும் வளர்வது உறுதி.

தேவையானவை

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - தேவைகேற்ப

செய்முறை

கீரையை 2 கப் தண்­ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைத்துகொள்ளவும்.

இவ்வாறு செய்யும் போது கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விடும்.
கீரை தண்ணீரை உடனடியாக வடிகட்டி கொள்ளவும்.

இந்த தண்ணீர் சூடாக இருக்கும் போதே அதனோடு வெண்ணை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில் இந்த கீரை தண்ணீரோடு, நீரில் கலந்து வைத்த சோள மாவு மற்றும் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்

வெப்துனியாவைப் படிக்கவும்