பரு‌ப்பு ப‌ச்சடி

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:13 IST)
எ‌த்தனை நா‌ட்களு‌க்கு‌த்தா‌ன் நா‌ம் செ‌ய்ததையே செ‌ய்து ரு‌சி‌ப்பது, கொ‌ஞ்ச‌ம் எ‌ல்லை தா‌ண்டி ஆ‌ந்‌திர உணவுகளை செ‌ய்து ரு‌சி‌ப்போ‌ம். எ‌ளிதான ம‌ற்று‌ம் சுவையானதாக இரு‌க்கு‌ம்‌ பரு‌ப்பு‌ப் ப‌ச்சடி ஆ‌ந்‌திரா‌வி‌ல் ‌மிக‌ப் ‌பிரபல‌ம்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

துவரம் பருப்பு - அரை கப்
கா‌ய்‌ந்த மிளகாய் - 4
தனியா - ‌சி‌றிதளவு
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ‌சி‌றிது
புளி - ஒரு ‌சிறு உரு‌ண்டை

செ‌ய்யு‌ம் முறை

வெங்காயத்தை சிறிசாக அரிந்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் மற்றும் தனியாவை போட்டு வறுக்கவும். அதனை ஒரு த‌ட்டி‌ல் எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ண்டு பிறகு துவரம் பருப்பு போட்டு சிவக்கும் வரை வறு‌‌க்கவு‌ம்.

மிக்ஸியில் மிளகாய், தனியாவை முதலில் அரைக்கவும். பிறகு பருப்பு மற்றும் புளி சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். பிறகு ஒரு கப் தண்ணீர், உப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

சுவையான பரு‌ப்பு‌ப் ப‌ச்சடி தயா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்