தேங்காய் உப்புமா

வியாழன், 27 ஜனவரி 2011 (18:33 IST)
தேவையானவை:

பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய்த் துருவல் - 1 கப்
மிளகாய் வற்றல் - 10
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
எண்ணெய் - போதுமான அளவு
உப்பு - போதுமான அளவு

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசியையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்

பிறகு தண்ணீரை வடித்துவிட்டு அவற்றோடு உப்பு, புளி, தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல் ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த மாவுடன் போதுமான தண்ணீர் சேர்த்து நீர்த்த தோசை மாவு போல் கலக்கிக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கரைத்த மாவை வாணலியில் கொட்டி தொடர்ந்து கிளற வேண்டும்.

நீர் நன்கு வற்றி உப்புமா பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிச் சூடாக பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்