தவலை வடை

திங்கள், 1 பிப்ரவரி 2010 (13:08 IST)
தேவையானவை :

பச்சரிசி - அரை கப்
பருப்பு, பா பருப்பு, து பருப்பு, உ பருப்பு தலா - அரை கப்
ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி
நறு‌க்‌கிய தேங்காய் - கால் கப்
கா மிளகாய் - 6
ந‌று‌க்‌கிய இஞ்சி, ப மிளகாய் - ‌சி‌றிது
க‌றிவே‌ப்‌பிலை, ம‌ல்‌லி‌த்தழை - ‌சி‌றிது
பெருங்காயம் - 3 ‌சி‌ட்டிகை
கடுகு - 1 தே‌க்கர‌ண்டி
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவ‌ற்றை ஒன்றாக ஊறவையுங்கள்.

உளுத்தம் பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜ‌‌வ்வ‌ரி‌சியை த‌னியாக ஊறவை‌க்கவு‌ம்.

ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் ஊ‌றிய பரு‌ப்பை காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள்.

பிறகு, ம‌ற்ற பரு‌ப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள்.

அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக வைத்துக் கொள்ளுங்கள். அ‌தி‌ல் கடுகைப் பொரித்து சேருங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள்.

சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். சுவையான வடை தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்