கிரீன்புலாவ் (சைவம்)

தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி- 3 கப் (உரித்து வேக வைத்தது)
தேங்காய் பால் - 2 கப்
பாஸ்மதி அரிசி-2 1/2 கப் (கழுவி 1/2 மணி நேரம் ஊர வைத்தது)
அரைத்த தக்காளி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி --1/2 கப்
பச்சை ஃபுட் கலர் -சில துளிகள்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
மிளகு-5
பட்டை- 1 துண்டு
பிரியாணி இலை - 1
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

1. நெய்யை சூடாக்கி, பட்டை, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.

2. பிறகு அதில் அரிசியை சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.

3. அதில் அரைத்த தக்காளியை சேர்க்கவும்.

4. பிறகு தேங்காய் பாலைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

5. பச்சை கலர், பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

6. மூடி வைத்து குறைந்த தீயில் புலாவ், உலர்ந்த நிலை வரும் வரை சமைக்கவும்.

7. நன்றாக பொன் நிறத்தில் வறுத்த வெங்காயத்தையும், நறுக்கிய கொத்தமல்லியையும் மேலே தூவி சூடாக பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்