ப்ரெட் புலாவ்

சனி, 5 மார்ச் 2011 (18:23 IST)
தேவையானவை:

ரொட்டி - 1
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 6
உருளைக்கிழங்கு - 1
காலி·ப்ளவர் - 1 கப்
குடமிளகாய் - 1
கேரட் - 1
பச்சை பட்டாணி - 1/2 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிதளவு
வறுத்த முந்திரி - 8 முதல் 10

செய்முறை:

ரொட்டியை சிறிய துண்டுகளாக்கி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் லேசாக வதக்க‌க் கொ‌ள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சீரகம் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

பின்னர், அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

பொடியாக அரிந்த காய்கறிகள், பட்டாணி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

அதன்பின்னர், மஞ்சள்தூள், மசாலாத்தூள் உப்பு சேர்த்து காய்கள் நன்கு வேகும் வரை வதக்கவும்.

இதில் வதக்கிய ரொட்டித் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும்.

இந்தப் புலாவ் சிறிது நேரம் ஊறிய பின்னர் உப்புக் காரத்தை நன்கு உரிஞ்சிக் கொள்ளும்.

கொத்துமல்லி, முந்திரிப் பருப்பு தூவி பரிமாறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்