பால் கறி குழம்பு!

திங்கள், 10 டிசம்பர் 2012 (15:37 IST)
பாரம்பரிய முறையில் பன்னீர் செய்து அதனை கொண்டு செய்யப்படும் இந்த‌க் குழ‌ம்பு சாதம், இட்லி, தோசை ஆகிவற்றுடன் சாப்பிடும்போது மிக‌ச் சுவையாக இருக்கும்.

தேவையானவை:

பால் - 1 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
நறுக்கிய தக்காளி - 1 கப்
பூண்டு (அரைத்தது) - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
புளி தண்ணீர் - 1/2 கப்
கடுகு - சிறிது
க‌றிவேப்பிலை- சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

பாலை காய்ச்சி அதில் எலுமிச்சை சாறினை சேர்த்து தனியே வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து இந்த‌க் கலவையை ஒரு சுத்தமான துணியினால் வடிகட்டி கொள்ளவும்.

தயாரிக்க‌ப்பட்ட பன்னீரை சிறிது உருண்டைகளாக்கி கொண்டு அவற்றை எண்ணெய்யில் பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

அத‌ன்‌பி‌ன்ன‌ர், ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், பூண்டு விழுது, தக்காளி, க‌றிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு இதோடு புளி தண்ணீர், உப்பு, மிளகாய் மற்றும் மஞ்சள் பொடியை சேர்த்து குழம்பு பதம் வந்ததும் பொறித்த பன்னீர் உருண்டைகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்