கொள்ளு பருப்பு மசாலா

செவ்வாய், 18 டிசம்பர் 2012 (14:07 IST)
உடலுக்கு சக்தியளிக்கும் கொள்ளுபோன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துகொண்டால் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

தேவையானவை

கொள்ளு - 2 கப், வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 3 பல் , புளி தண்ணீர் - 1 கப், மிளகு தூள் - 1 ஸ்பூன், சோம்பு - 1 ஸ்பூன், தனியா தூள் - 1 ஸ்பூன், கறிவேப்பிலை - சிறுது,கடுகு, உளுந்து - சிறுது, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

கொள்ளு பருப்பை 5 நிமிடங்கள் வறுத்து, பூண்டு சேர்த்து வேகவைக்கவும்

வேகவைத்த கொள்ளு பருப்புடன் தனியாதூள்,மிளகு தூள், புளி தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.

ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து தாளித்து கொள்ளு பருப்பு கலவையோடு சேர்க்கவும்.


வெப்துனியாவைப் படிக்கவும்