அகிம்சையும் உண்ணாவிரதமும்!

வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (18:06 IST)
த‌மிழா‌க்க‌ம் - பா. முகிலன்
 
மகாத்மா காந்தி
 
ஒருவர் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலம் கருதியோ, செய்த தவறுக்கு தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்வதாக எண்ணியோ இருக்கலாம். இந்த வகையான உண்ணாவிரதம் இருப்போருக்கு அகிம்சை மீது நம்பிக்கை இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இங்கே சில நேரங்களில் சமூகம் செய்த சில தவறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது. அதுவும் அகிம்சையை தீவிரமாக பின்பற்றுகிற ஒருவருக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேறு வழி ஏதும் இல்லாததால் அவர் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்.
மேற்கு பஞ்சாப்புக்கு செல்வதற்காக செப்டம்பர் 9ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து நான் டெல்லிக்கு திரும்பியபோது, அதுபோன்ற ஒரு தருணம் எனது வாழ்க்கையிலும் வந்தது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் டெல்லி அன்று சாவு நகரம் போன்று காட்சியளித்தது.
 
ரயிலிலிருந்து நான் இறங்கியபோது நான் பார்த்த ஒவ்வொருவரது முகங்களிலும் துக்கம் படர்ந்திருப்பதை உணர்ந்தேன். நகைச்சுவைக்கும், மகிழ்ச்சிக்கும் பெயர்போன சர்தார்ஜிக்களின் முகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை.
 
என்னை வரவேற்பதற்காக பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த அந்த நபர், டெல்லியில் நிகழ்ந்த அந்த சோகச் செய்தியை உடனடியாக என்னிடம் தெரிவித்தார். 'செய் அல்லது செத்து மடி ' என்ற நிலையில்தான் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதை நான் ஒருமுறை கண்டிருக்கின்றேன்.
 
ராணுவம் மற்றும் காவல் துறையினரின் கடும் நடவடிக்கையால் அங்கு அமைதி நிலவியது.ஆனாலும் ஒவ்வொருவரின் நெஞ்சுக்குள்ளும் புயல் வீசிக்கொண்டிருந்தது. அடுத்து வரும் எந்த நாளிலும் அது வெடிக்கலாம். 'செய்'வதாக நான் உறுதியெடுத்துக்கொண்டவற்றில் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை நான் எண்ணி பார்ப்பதுதான் சாவிலிருந்து என்னை விலக்கியிருக்க செய்யும்.
 
 
இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே இதயப்பூர்வமான நட்புறவு இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். முன்பெல்லாம் இத்தகைய நட்புறவு அவர்களுக்கிடையே இருந்தது. ஆனால் இன்று அது இல்லை. அமைதி குறித்து எந்த ஒரு இந்திய தேசாபிமானியும் சிந்தித்து பார்க்கவே முடியாத நிலை. உள்ளுக்குள் இந்த குரல் நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்தாலும், அதை கேட்க முடியாதவாறு எனது காதுகளை மூடிக்கொண்டேன். அது சாத்தானின் குரலாகவும் இருக்கலாம் அல்லது எனது பலவீனமாகவும் இருக்கலாம்.
 
சக்தி இல்லாமல் இருப்பதுபோன்று உணர்வதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை, அதுவும் ஒரு சத்தியாகிரகவாதி அவ்வாறு இருக்கவும் கூடாது. வாள் இருக்கும் இடத்தில் ஒருவனது அல்லது மற்றவர்களது கடைசி புகலிடம் சத்தியாகிரகம்தான்.
 
என்னை தினந்தோறும் பார்க்கும் இஸ்லாமிய நண்பர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு என்னிடத்தில் பதிலில்லை. கடைசியில் என்னுடைய கையாலாகத்தனம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்று கொண்டிருந்தது. உண்ணாவிரதம் மேற்கொண்டால் அது உடனடியாக அகன்றுவிடும். கடந்த மூன்று நாட்களாகவே அது குறித்து சிந்துத்துக் கொண்டிருந்தேன். கடைசி முடிவு எனக்குள் மின்னலாக தோன்றி, என்னை மகிழ்ச்சி கொள்ள வைத்தது. தனது உயிரை விடுவதை விட மேலானதை கொண்ட தூய்மையானவன் யாருமே இல்லை. அந்த நடவடிக்கை நியாயமானதுதான் என்பதற்கு எனக்குள் அந்த தூய்மை இருப்பதாக நான் நம்புகிறேன். 
 
ஹரிஜன், 18.01.1948 
 
மொழிபெயர்ப்பு : பா. முகிலன். 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்