இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் பாளைய‌க்கார‌ர்க‌‌ளி‌ன் புர‌ட்‌சி

வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (17:55 IST)
இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராக த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து முத‌லி‌ல் குர‌ல் கொடு‌த்தது பாளை‌யக்கார‌ர்க‌ள் எ‌ன்றா‌‌ல் அது ‌மிகைய‌ல்ல. ‌வீர‌‌ம் ‌நிறை‌ந்த ம‌ண்‌ணி‌ல் ‌பிற‌ந்த பாளைய‌க்கார‌ர்க‌ளி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் ‌வீர‌ம் எ‌ன்ற எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி 'வெ‌ள்ளை அணு' ச‌ற்று அ‌‌திகமாகவே இரு‌ந்தது எ‌னலா‌ம். அட‌க்குமுறை‌யை‌ப் பய‌ன்படு‌த்‌தி த‌ங்க‌ளிட‌ம் ‌திறை (க‌ப்ப‌ம்) வசூ‌லி‌க்க ‌நினை‌த்த ஆ‌ங்‌கிலேய‌ர்களை எ‌‌தி‌ர்‌த்து முத‌ன் முத‌லி‌ல் குர‌ல் கொடு‌க்க‌த் தொட‌ங்‌கின‌ர். இதுவே சுத‌ந்‌தி‌ர‌ப் போரா‌ட்ட‌த்து‌க்கான மு‌த‌ல் ‌வி‌த்தாக அமை‌ந்தது.
க‌ர்நாடக உட‌ன்படி‌க்கை மூல‌ம் பாளைய‌க்கார‌ர்க‌ளிட‌மிரு‌ந்து வ‌ரி வசூ‌லி‌க்கு‌ம் உ‌ரிமையை‌ப் பெ‌ற்ற ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் வரி வசூ‌லி‌க்க ஆ‌ட்‌சியாள‌ர்களை ‌நிய‌மி‌‌த்தன‌ர். ஆனா‌ல் பாளை‌ய‌க்கார‌ர்க‌ள் ஆ‌ங்‌கிலேயரு‌க்கு அடிப‌ணி‌ந்து ப‌ணிபு‌ரிய ‌விரு‌ம்ப‌‌வி‌ல்லை. ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் பாளை‌ய‌க்கார‌ர்க‌ள் வச‌ம் இரு‌ந்த ப‌ல்வேறு இட‌ங்களை ஆ‌‌க்‌‌கிர‌மி‌‌த்தன‌ர். இதனா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்களை த‌மிழக‌த்‌தி‌லிரு‌ந்து ‌விர‌ட்டுவத‌ற்கு த‌க்க தருண‌த்தை எ‌‌தி‌ர்பா‌ர்‌த்து‌ பாளை‌ய‌க்கார‌ர்க‌ள் கா‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். நா‌ம் இ‌க்க‌ட்டுரை‌யி‌ல் புக‌ழ்வா‌ய்‌ந்த பாளை‌ய‌க்கார‌ர்க‌ளான பு‌லி‌த்தேவ‌ர், ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌‌கியோ‌ர் ஆ‌‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராக செ‌ய்த பு‌ர‌ட்‌சியை‌ ‌நினைவு கூ‌ர்வோ‌ம்.
 
பு‌லி‌த்தேவ‌ர்: ‌வீர‌மு‌ம், ‌தீரமு‌ம் ‌நிறை‌ந்த பு‌லி‌த்தேவ‌ரை‌க் க‌ண்டு ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் ‌மிர‌ண்டன‌ர். இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌‌ங்‌கிலேய ஆ‌ட்‌சியை த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து முத‌லி‌ல் எ‌தி‌ர்‌த்தவ‌ர் எ‌ன்ற ‌சி‌ற‌ப்பு பெ‌ற்றவ‌ர் பு‌லி‌த்தேவ‌ர். இவ‌ர் ‌திருநெ‌ல்வே‌‌லி‌க்கு அரு‌கி‌ல் உ‌ள்ள நெ‌ற்க‌ட்டு‌ச் செ‌வ்வ‌ல் எ‌ன்ற பாளைய‌த்‌தி‌ல் ஆ‌தி‌க்க‌ம் செ‌ய்து வ‌ந்தா‌ர். இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் ‌சி‌ப்பா‌ய்‌க் கலக‌த்‌தி‌ற்கு‌ம் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். 
 
இவ‌‌ர் ஆ‌ங்‌கிலேயரு‌க்கு‌ம், ஆ‌ற்காடு நவா‌ப்பு‌க்கு‌ம் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ க‌ப்ப‌ம் க‌ட்ட மறு‌த்ததோடு அவ‌ர்களை கடுமையாக எ‌தி‌ர்‌க்கவு‌ம் செ‌ய்தா‌ர். இதனா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ப் படைகளு‌ம், நவா‌ப்‌பி‌ன் படைகளு‌ம் பு‌லி‌த்தேவரை மு‌ற்றுகை‌யி‌ட்டு தா‌க்‌கின‌ர். ஆனா‌ல் பு‌லி‌த்தேவ‌ர் இதனை‌க் க‌ண்டு அ‌ஞ்சா‌ம‌ல் அவ‌ர்களை எ‌தி‌ர்‌த்து போ‌‌ரி‌ட்டா‌ர். ‌வீர‌ம் ‌நிறை‌ந்த பு‌லி‌த்தேவ‌ர் இர‌ண்டு படைகளையு‌ம் ‌திருநெ‌ல்வே‌‌லி‌யி‌ல் இரு‌ந்து ஓட, ஓட ‌விர‌ட்டி அடி‌த்தா‌ர்.
 
1755ஆம் ஆண்டு க‌ர்ன‌ல் எரோ‌ன் த‌ம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வ‌ரி வசூலிக்கும் உரிமை ஆ‌ங்‌கிலேய‌ர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு ஆ‌ங்‌கிலேய‌ர்களை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டுச் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதேபோ‌‌ல் திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1760ஆம் ஆண்டு யூசு‌ப்கான் நெற்கட்டுச் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கே‌ப்ட‌ன் பெள‌ட்ச‌ன் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். உ‌ய‌ர் அ‌திகார‌த்‌தி‌ற்கு எ‌திராக போராடிய ‌வீரனு‌க்கு உதாரணமாக பு‌லி‌த்தேவ‌‌ரி‌ன் வா‌‌ழ்‌க்கையு‌ம், போரா‌ட்டமு‌ம் ‌‌சிற‌ப்புற அமை‌ந்து‌ள்ளது.
 
வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன்: பா‌ஞ்சால‌‌ங்கு‌றி‌‌ச்‌சி பாளை‌ய‌த்தை ஆ‌ட்‌சி செ‌ய்து வ‌ந்த ‌வீர‌பா‌‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌னும் பு‌லி‌த்தேவ‌ர் போலவே ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்த மறுத்து வ‌ந்தா‌ர். ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வரி வசூ‌ல் கொ‌ள்கையே ஆ‌ங்‌கிலேயரு‌க்கு‌ம், க‌ட்டபொ‌ம்மனு‌க்கு‌ம் இடையே ‌விரோத‌ம் ஏ‌ற்பட மு‌க்‌கிய காரணமாக அமை‌ந்தது.
 

பா‌ஞ்சால‌ங்கு‌றி‌‌ச்‌சி பாளைய‌ம் ஆ‌ங்‌கில ‌கிழ‌க்‌கி‌ந்‌திய‌க் க‌ம்பெ‌னி‌க்கு‌ச் செலு‌த்த வே‌ண்டிய வ‌ரி‌த்தொகையை க‌ட்டாம‌‌ல் ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் தாம‌த‌ப்படு‌த்‌தி வ‌ந்தா‌ர். இதனா‌ல் ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் வ‌ரியை உடனடியாக செலு‌த்துமாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு பல கடித‌ங்க‌ள் எழு‌தினா‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அவ‌ற்றை ‌நிராக‌ரி‌த்தா‌ர். இதனா‌ல் கோபமு‌ற்ற ‌திருநெ‌ல்வே‌லி மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் கா‌லி‌ன் ஜா‌க்ச‌ன் த‌ம்மை நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்கு‌மாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு க‌ட்டளை‌யி‌ட்டா‌ர். ஆ‌ங்‌கிலேய‌ர் ஜா‌க்ச‌ன் கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறு‌தியாக ‌சி‌ங்க‌த்தை அத‌ன் குகை‌யிலேயே ச‌ந்‌தி‌க்கு‌ம் ‌வீர‌‌ம் கொ‌ண்ட ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ராமநாதபுர‌ம் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் ஜா‌க்சனை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர். அ‌ங்கு க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வ‌ரி வசூ‌லி‌ப்பை எ‌தி‌ர்‌த்து ஜா‌க்ச‌னிட‌ம் கடுமையாக வா‌தி‌ட்டா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திரமடை‌ந்த ஜா‌க்ச‌ன் க‌ட்டபொ‌ம்மனை சூ‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் மூல‌ம் கைது செ‌ய்ய ‌நினை‌த்தா‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அ‌ங்‌கிரு‌ந்து த‌ந்‌திரமாக த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்றா‌ர்.
 
இதையடு‌த்து க‌ட்டபொ‌ம்ம‌ன் மருது சகோதர‌ர்களுட‌ன் இணை‌ந்து ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராகப் போர் தி‌ட்ட‌ம் ‌‌‌‌தீ‌ட்டினா‌ர். க‌ட்டபொ‌ம்ம‌ன் ‌சிவ‌கி‌ரி பாளைய‌த்தை தனது கூ‌ட்டமை‌ப்‌பி‌ல் சே‌ர்‌ப்பத‌ற்காக ‌சிவ‌கி‌ரி ‌மீது படையெடு‌த்து‌ச் செ‌‌ன்றா‌ர். ஆனா‌ல் ‌சிவ‌கி‌ரி பாளைய‌ம் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்து‌ம் பாளையமாக இரு‌ந்ததா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் க‌ட்டபொ‌ம்ம‌னி‌ன் படையெடு‌ப்பை த‌ங்களது அ‌திகார‌த்‌தி‌ற்கு எ‌திரான ஒரு சவாலாக கரு‌தி‌ த‌ங்களது படைகளை ‌திருநெ‌ல்வே‌லி ‌மீது படையெடு‌க்குமாறு கட்டளை‌யி‌ட்டன‌ர். மேஜ‌ர் பான‌‌ன் தலைமை‌யிலான ஆ‌ங்‌கிலேய படைக‌ள் பா‌ஞ்சால‌ங்கு‌றி‌ச்‌சி கோ‌ட்டையை மு‌ற்றுகை‌யி‌ட்டது. பான‌ர்மேன் க‌ட்டபொ‌ம்மனை சரணடையுமாறு கோ‌ரினா‌‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அதனை ஏ‌ற்க மறு‌த்து அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்று பு‌து‌க்கோ‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள கள‌ப்பூ‌ர் கா‌ட்டி‌ல் தலைமறைவாக இரு‌ந்தா‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல் புது‌க்கோ‌ட்டை அரச‌ர் விஜய ரகுநாத தொ‌ண்டைமா‌ன் க‌ட்டபொ‌ம்மனை கைது செ‌ய்து ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளிட‌ம் ஒ‌ப்படை‌த்தா‌ர். இ‌ப்படியாக ஆ‌ங்‌கிலேயரை எ‌தி‌ர்‌த்து பலவகை‌யிலு‌ம் போராடிய ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் 1799ஆ‌ம் ஆ‌ண்டு ‌அ‌க்டோப‌ர் மாத‌ம் 16ஆ‌ம் தே‌தி கய‌த்தாறு கோ‌ட்டை‌யி‌ல் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டா‌ர். பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது எனினும் அவர்கள் விதைத்த வீரத்திற்கு எ‌ன்று‌‌ம் அழிவில்லை. கட்டபொம்ம‌ன் இ‌ந்த மண்ணை விட்டு மறைந்தாலும் ந‌ம் அனைவருடைய மனதிலு‌ம் நிலைத்து வாழ்கிறார். 
 
இ‌ப்படி ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்களை நட‌த்‌தி‌, பல உ‌யி‌ர்களை‌த் ‌தியாக‌ம் செ‌ய்து பெ‌ற‌ப்ப‌ட்ட இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌‌த்தை இ‌ன்று நா‌ம் எ‌ப்படி கொ‌ண்டாடு‌கிறோ‌ம். ‌‌மிகு‌ந்த ச‌ந்தோஷ‌‌த்துடனு‌ம், உ‌‌ற்சாக‌த்துட‌னு‌ம், க‌ர்வ‌த்துடனு‌ம் கொ‌ண்டாட வே‌ண்டி‌ய சுத‌ந்‌திர‌‌தின‌ம், இ‌ன்று பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் கொ‌ண்டாட வே‌ண்டிய சூ‌‌ழ்‌நிலை‌யில உ‌ள்ளோ‌ம். டெ‌ல்‌லி செ‌‌ங்கோ‌ட்டை‌யி‌ல் தே‌சிய கொடியே‌ற்‌றி உரையா‌ற்று‌ம் ‌பிரதமரு‌க்கு பல‌த்த பாதுகா‌ப்பு, சுத‌ந்‌திர ‌தின‌த்தையொ‌ட்டி நாடு முழுவது‌ம் பல‌த்த பாதுகா‌ப்பு, எ‌ன்று எ‌ப்போது எ‌ங்கு கு‌ண்டு வெடி‌க்குமோ எ‌ன்ற அ‌ச்ச‌த்துட‌ன் சுத‌ந்‌திர‌த் ‌தி‌ன‌த்த‌ன்று ம‌க்க‌ள் த‌ங்‌க‌ள் ‌‌வீ‌ட்டை ‌‌வி‌ட்டே வெ‌‌ளியேற ‌முடியாத நிலை‌யி‌ல் இரு‌க்‌கிறோ‌ம். அ‌ந்த அளவு‌க்கு பய‌ங்கரவாத‌ம் நா‌ட்டை அ‌ச்சுறு‌த்‌தி வரு‌‌கிறது. ‌மீ‌ண்டு‌ம் ஒரு பு‌லி‌த்தேவ‌ர், ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌‌கியோர் ந‌ம் நா‌ட்டி‌ல் ‌பிற‌ந்தா‌ல் தா‌ன் ‌இ‌ந்த பய‌ங்கரவாத‌த்தையு‌ம் வேறோடு அறு‌க்கமுடியுமோ எ‌ன்னவோ?
 

வெப்துனியாவைப் படிக்கவும்