குற்றால அருவிகளில் நீர் குறைந்துவிட்டதால் கோடை விடுமுறையை கொண்டாட பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிகள். பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்.
இதில் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகிய இரு அருவிகளுக்கு நடந்தோ அல்லது வாகனத்திலோ சென்றுவிடலாம். பாணதீர்த்த அருவிக்கு பாபநாசம் அணையிலிருந்து படகு மூலமும் பின்னர் மலைப்பகுதியில் 15 நிமிடம் நடந்தும் செல்ல வேண்டும்.