ஏற்காடு கோடை விழாவில் மலர் சந்திரயான்

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:18 IST)
ஏற்காடு கோடை விழாவில் 20 ஆயிரம் கொய்மலர்களால் உருவா‌க்க‌ப்ப‌ட்ட சந்திரயான் ராக்கெட் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டில் இந்த ஆண்டு கோடை விழா, தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. ஜூன் 5ம் தேதி கோடை விழா தொடங்கி, 7ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தாமதமாக தொடங்கினாலும், இந்த ஆண்டு பல சிறப்பு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகை‌யி‌ல், கோடை விழாவில் பழங்களால் வரவேற்பு வளைவு அமைக்கப்படுவது வழக்கம். இந்த முறை, கொய்மலர்களால் வரவேற்பு வளைவு வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மலர்களால் ராட்சத டயனோசர் உருவாக்கப்பட்டது.
இந்த ஆண்டு, 20 ஆயிரம் கொய் மலர்களால் சந்திரயான் ராக்கெட் தயாரித்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

விழாவுக்காக, ஊட்டி, பெங்களூரில் இருந்து அந்தூரியம், கார்னேசன், ரோஜா, கிரேசான்டியம், கிளாடியோலஸ், பெர்ட்டூனியம் போன்ற கொய் மலர்கள் ரூ.1 லட்சத்துக்கு வரவழைக்கப்படுகிறது. விழாவின்போது 300 இடங்களில் கண்ணை கவரும் பத்தாயிரம் பூந்தொட்டிகள் வைக்கப்படும். தோட்டக்கலை, கால்நடைத் துறை, தாவரவியல்துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்படும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்