இரத்த அழுத்தம் தடுக்கும் எளிய வழிகள் ..! f

வியாழன், 12 மே 2022 (00:15 IST)
95 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவார்களுக்கு ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக்  குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல், கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்கள் போன்றவற்றால்  உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
 
கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். அதிகமாக உப்பு உட்கொள்வதால் அதிகமான உப்பு இரத்தத்தில் கலக்கிறது. இதனால் இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம்  மூலமாக அதை வெளியே தள்ள முனைகிறது. இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது.
 
 
உடல் எடை கூடக்கூட உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் கூடுகிறது. உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் இரத்தத் தமணிகளின் உட்சுவரின் குறுக்களவு குறைவதால் ஏற்படுகிறது. இது ஏன் குறைகிறது. இதற்கு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள  கொழுப்புப் பொருட்கள் வேதியியல் மாற்றம் அடைந்து மற்ற பல கொழுப்புப் பொருட்களுடனும், இரத்தத்தை உறையவைக்கும் பிற இரத்தப்  பொருட்களுடனும் சேர்ந்து இரத்தத் தமணியின் உட்சுவரின் நோய்வாய்ப்பட்ட திசுக்களுக்கு இடையே படிந்து விடுகிறது.
 
அதிகாலை நடைப்பயிற்சி, சிறிது உடற்பயிற்சி செய்துவர வேண்டும். யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது மன அழுத்தத்தைக்  குறைக்கும் தன்மை கொண்டது.
 
இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரித்து நோய் வராமல் தடுக்கும்.
 
உணவுக் கட்டுப்பாடு: எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். வயிறு புடைக்க உண்பதைத் தவிர்ப்பது நல்லது.  முதலில் உண்ட உணவு செரிக்கும் முன்பே அடுத்தவேளை உணவு அருந்துவதும், நீண்ட பட்டினி கிடப்பதும் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக  அமையும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. 
 
மாமிச கொழுப்பு வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு, அசைவ உணவுகள், பருப்பு வகைகள் வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக்  கொள்ள வேண்டும். 
 
காலை உணவை காண்டிப்பாக சாப்பிட வேண்டும். சிற்றுண்டியாக இருத்தல் நல்லது. உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவு அருந்திய உடனே தூங்கச் செல்லக்கூடாது. 
 
மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், எரிச்சல், தீரா சிந்தனை, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் கூடாது. இப்படி சில விஷயங்களில் நம்மை மாற்றிக்கொண்டால் இரத்த அழுத்தம் மட்டுமல்ல நீரிழிவு  நோயிலிருந்துகூட நம்மை காத்துக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்