மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

வியாழன், 16 நவம்பர் 2023 (08:41 IST)
மழைக்காலம் வந்தாலே சளி, காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்களும் வந்து விடுகின்றன. சில ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் இதுபோன்ற சீசன் வியாதிகளால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம். அதுகுறித்து பார்ப்போம்.




மழைக்காலங்களில் ஏற்படும் சீசன் தொற்றுகளால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினசரி 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டியது அவசியம்.

தினசரி சில மணி நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.

விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை எளிதில் சீசன் நோய்கள் தாக்கும். அவர்கள் விட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி உணவில் தேவையான அளவு விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினசரி உணவில் மிளகு சேர்த்துக் கொள்வது சீசன் வியாதிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரும்.

நோய் தொற்றிலிருந்து தப்பிக்க வாழும் பகுதியை கிருமிகள் சேராதபடி சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்

சீசன் வியாதிகளின் அறிகுறிகள் தென்பட்டால் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்