கருமை நிறத்தை மாற்றிட டிப்ஸ்

சனி, 28 நவம்பர் 2015 (16:38 IST)
கருமை நிறத்தை மாற்றிட உதவும் உணவு முறைகளோடு, ஒரு சில அழகு குறிப்புகளும் செய்தல் அவசியம்.


 

 
1. பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.
 
2. வறண்ட சருமம் உள்ளவர்கள், இரவில் கசகசாவை ஊற வைத்து பகலில் அரைத்து முகத்தில் போட்டு வர பொலிவு பெறும்.
 
3. பேஸ் பேக் போடும் போது கண்ணை சுற்றியும் போடுவதை தவிர்க்கவேண்டும்.
 
4. குளிக்கும்போது இரண்டு துளி தேங்காயை எண்ணெய், தண்ணீரில் விட்டு குளித்தால் நாள் முழுவதும் ப்ரஷ்ஷாக இருக்கும்.
 
5. பொன்னாகன்னி கீரை, கறுப்பு பன்னீர், திராட்சை, பனைவெல்லம், மிளகுத்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்தால், உடல் நாளடைவில்
நிறம் மாறும்.
 
6. கடலை மாவு, பச்சை பயிறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பவுடராக்கி வைத்து கொண்டு, முகம் கழுவும் போது பயன்படுத்தினால் முகம் பளிச்சிடும்.
 
7. ரோஜா இதழ்கள், பூலாங்கிழங்கு, ஆரஞ்சு தோல் ஆகியவற்றை அரைத்து மசாஜ் செய்து வர நிறம் பளிச்சிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்