முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. முருங்கைக்காய் அதிக சத்து நிறைந்த காயாகும்.
முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, B2, B3, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
முருங்கைக்காயைவிட முருங்கைக்காயின் விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. அதுவும் இந்த முருங்கை விதைகள் பல நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.