பீன்ஸில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது.
இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும். எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.