ர‌த்த அழு‌த்த‌த்தை‌க் க‌ண‌க்‌கிட சோதனை

வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (12:57 IST)
குடு‌ம்ப‌த்‌தி‌ல் யாரு‌க்காவது ஏ‌ற்கனவே உய‌ர் ர‌த்த அழு‌த்த நோ‌ய் இரு‌ந்தா‌ல் 20 வயது முதலே ர‌த்த அழு‌த்த‌த்தை ஆ‌ண்டு தோறு‌ம் சோதனை செ‌ய்து கொ‌ள்வது ந‌ல்லது.

ர‌த்த அழு‌த்த நோ‌ய் யாரு‌க்கு வே‌ண்டுமானாலு‌ம் வரலா‌ம். எனவே 20 வயது‌க்கு மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ஆ‌ண்டுதோறு‌ம் ர‌த்த அழு‌த்த அளவை‌ப் ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

ர‌த்த அழு‌த்த‌ம், ர‌த்த ச‌ர்‌க்கரை அளவு, ர‌த்த கொழு‌ப்பு‌ச் ச‌த்து அளவுகளை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் ப‌ரிசோதனை செ‌ய்வது ந‌ல்லது.

ப‌ரிசோதனை அளவுக‌ள் இய‌ல்பானதாக இரு‌ந்தா‌ல் 40 வயது வரை தொட‌ர்‌ந்து 5 ஆ‌ண்டுகளு‌க்கு ஒரு முறை சோதனை செ‌ய்தா‌ல் போதுமானது.

40 வயதை‌க் கட‌ந்த ‌பிறகு எ‌ந்த யோசனையு‌ம் இ‌ன்‌றி ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மே‌ற்க‌ண்ட 3 சோதனைகளையு‌ம் க‌ட்டாய‌ம் செ‌ய்து வரவு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்