உட‌ல் நல‌‌க் கு‌றி‌ப்புக‌ள்

செவ்வாய், 2 மார்ச் 2010 (12:54 IST)
காய்கறிகளை பெரிய சைசில் நறுக்கவும் இதனால் அதில் உள்ள புரத சத்துகள் பாதுகாக்கப்படும்.

இரவு உணவிற்கும், படுக்கச் செல்வதற்கும் இடையே 90 நிமிட இடைவெளி இருப்பது நல்லது.

நம் உடலிலேயே இய‌ற்கையாக அமை‌ந்‌‌திரு‌க்கு‌ம் புற்று நோய்க்கு காரணமான சில ஃப்ரீ ரேடிகல்‌‌ஸை தேயிலை மூலம் குணமாக்கலாம். ஆகவே நல்ல முறையில் தயாரிக்கப்படும் தேனீர் உங்கள் உடலின் புற்று நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராடும் குணமுடையது.

முக்கியமான நபரை சந்திக்கும்போது அல்லது வேலைக்கான நேர்முகத்தேர்வு ஆகியவற்றிற்காக காத்திருக்கும்போது புத்தகம் அல்லது ஏதாவது பத்திரிக்கை எடுத்துக் கொண்டு சென்று படித்தால் மனது ரிலாக்சாக இருக்கும். மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.

இருதய நோயை பொறுத்தவரை நண்பர்கள், உறவினர்கள், பத்திரிகைகள், மற்றும் ஊடகங்கள் மூலம் நிறைய தவறான செய்திகள் உங்களை வந்தடையும். உங்கள் மருத்துவர்களிடம் யோசனை கேட்காமல் இந்த அமெச்சூர் யோசனைகளை கேட்டு நடப்பது நல்லதல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்