புரோட்டீனை குறைக்கலாம்

செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (12:45 IST)
அதிக வியர்வை வரும் இடங்களில் வேலை செய்பவர்கள் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடலாம்.

ஏன் என்றால் புரோட்டீன் சத்துக்கள் இறுதியில் யூரியாவாக மாறும். இது அதிகமாக வியர்ப்பதை ஊக்குவிக்கும்.

வியர்வையினால் உப்பை உடல் இழப்பதால் மோர், தயிர் போன்றவற்றில் உப்பு சேர்த்து சாப்பிடுவது உப்பு இழப்பை ஈடுகட்டும்.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

கடைகளில் கிடைக்கும் நீர் மாத்திரைகளை சாப்பிட வேண்டாம். இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

அ‌திகமாக ‌விய‌ர்வை வெ‌ளியேறு‌ம் வகை‌யி‌ல் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ ‌நிலை இரு‌ப்பவ‌ர்க‌ள் மட‌்டுமே அ‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் ஏ‌சி‌யி‌ல் வா‌ழ்பவ‌ர்களு‌க்கு ‌விய‌ர்வை வெ‌ளியேறுவது குறைவு‌. எனவே அவ‌ர்க‌ள் ச‌ரியான அளவு ‌நீ‌ர் அரு‌ந்‌தினா‌ல் போது‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்